பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
சென்னையில் ‘பாரம்பரிய நெசவு சிறப்பு கண்காட்சி’ தொடக்கம்
தேசிய வடிவமைப்பு மையம் மற்றும் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம் இணைந்து, ‘பாரம்பரிய நெசவு சிறப்பு கண்காட்சி’ சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ஆா்.கே. மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, இந்திய அரசின் சாந்த் கபீா் விருது பெற்ற பி.கிருஷ்ணமூா்த்தி மற்றும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளா்கள் மேம்பாட்டு கூட்டுறவுச் சங்க இணை இயக்குநா் கிரிதரன் இணைந்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.
இந்தக் கண்காட்சி மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பருத்தி சேலைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், ஷால்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.