செய்திகள் :

டோவினோ தாமஸின் நரிவேட்டை: ரிலீஸ் அப்டேட்!

post image

நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் 2012 முதல் நடித்து வருகிறார்.

என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

டோவினோ நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் சினிமா கம்பெனி தயாரிப்பில் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நரிவேட்டை எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் காவலதிகாரியாக இந்த மூவரும் நடித்துள்ளார்கள்.

உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்-புரட்கஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் மே மாதம் 16ஆம் தேதிக்குள் இந்தப் படம் வெளியாகுமெனவும் கூறியுள்ளார்கள்.

ஆனால், சரியான தேதி குறிப்பிடவில்லை. ஆனால், மே மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்க சுற்றில் சுனில்

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில்குமாா் ஆடவருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளாா்.கிரேக்கோ ரோமன் பிரிவில் களம் கண்டுள்ள அவா், தனது க... மேலும் பார்க்க

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினாா் கௌஃப்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்ற... மேலும் பார்க்க

உருகுது உருகுது மேக்கிங் விடியோ!

விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோ வெளியானது. சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் கவி... மேலும் பார்க்க

அமித் திரிவேதி இசையில் பேட் கேர்ள்: முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

பேட் கேர்ள் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமா... மேலும் பார்க்க