ஆர்ஜென்டீனாவை தேற்கடிப்போம்..! ஆபாசமாகப் பேசிய பிரேசில் கால்பந்து வீரர்!
பிரபல பிரேசில் கால்பந்து வீரர் ஆர்ஜென்டீனாவை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தேற்கடிப்போம் எனக் கூறியுள்ளார்.
தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி சமீபத்தில் உருகுவே அணியை வென்றது. அடுத்தாக நாளை காலை 5.30 மணிக்கு பிரேசிலை சந்திக்கிறது.
நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் என பிரேசிலின் நட்சத்திர வீரர் ரபீனியா தெரிவித்துள்ளார்.
ரொமாரியோ உடனான நேர்காணலில் ரபீனியா பேசியதாவது:
ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம்
நாங்கள் ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம். நிச்சயமாக இதைச் செய்வோம். களத்திலும் சரி களத்துக்கு வெளியேவும் நாங்கள் அவர்களை வீழ்த்துவோம். (ஆங்கில எழுத்து எஃப்-இல் தொடங்கும் ஆபாச வார்த்தையில் பேசினார்).
ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக நான் நிச்சயமாக கோல் அடிப்பேன். எனக்கு இருக்கும் அனைத்து திறமைகளையும் நான் வெளிப்படுத்துவேன் என்றார்.
2021-இல் ஆர்ஜென்டீனா வீரர் நிகோலஸ் ஓடமென்டி பிரேசில் வீரர் ரபீனாவை தனது முழங்கையினால் இடித்தார். அதனால் ரபீனாவுக்கு 5 தையல்கள் போட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜென்டீனாவுக்கு தேவை ஒரு டிரா
தென்னமரிக்க கால்பந்து கூட்டமைப்பில் இருந்து 10 அணிகளில் டாப் 6 அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும்.
இதில் ஆர்ஜென்டீனா அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பிரேசில் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.
பிரேசிலுடன் ஆர்ஜென்டீனா டிரா செய்தாலே உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் என்பது கவனிக்கத்தக்கது.