``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
மியாமி ஓபன்: முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா!
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ஜாஸ்மின் பலோனியை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஆர்னா சபலென்கா.
போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா தரவரிசையில் 6ஆவதாக இருக்கும் பலோனியை அரையிறுதியில் 6-2, 6-2 என ஆதிக்கம் செலுத்தி வென்றார்.
இந்தப் போட்டி 71 நிமிஷங்களில் முடிந்தது. இதில் முதல் செர்வில் 77 சதவிகித புள்ளிகளை சபலென்கா வென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு அரையிறுதியில் பிலிப்பின்ஸ் வீராங்கனை எலாவை அமெரிக்காவின் பெகுலா 7-6(3) 5-7 6-3 என்ற செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிலிப்பின்ஸ் வீராங்கனை அரையிறுதியோடு வெளியேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் பெகுலவை சபலென்கா நாளை (மார்ச்.29) சந்திக்கவிருக்கிறார்.