ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
ஏடிபி மாஸ்டர்ஸில் புதிய சாதனை படைத்த ஜோகோவிச்!
செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் மியாமி ஓபனில் அரையிறுத்திக்கு முன்னேறியுள்ளார். அதன்மூலம் புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச் செபாஸ்டியன் மியாமி காலிறுதியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் மிகவும் வயதான ஒருவர் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிபெற்றவராக ஜோகோவிச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பாக 37 ஆண்டுகள் 7 மாதங்களில் ரோஜர் பெடரர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
தற்போது ஜோகோவிச் 37 ஆண்டுகள் 10 மாதங்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் 84 சதவிகிதம் முதல் செர்வில் வெற்றி பெற்றார் ஜோகோவிச்.
அடுத்ததாக அரையிறுதியில் ஜோகோவிச் இந்திய நேரப்படி நாளை (மார்ச்.29) காலை பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சந்திக்கிறார்.
Aging like a fine wine @DjokerNole becomes the oldest ATP Masters 1000 semi-finalist in series history, as he defeats Korda 6-3 7-6(4)!@MiamiOpen | #MiamiOpenpic.twitter.com/RhdL7Q2vkx
— ATP Tour (@atptour) March 27, 2025