செய்திகள் :

ஷஹீன் பாகில் காலணி விற்பனையகத்தில் பெரும் தீ விபத்து

post image

தென்கிழக்கு தில்லியின் ஷஹீன் பாக் பகுதியில் உள்ள காலணி விற்பனையகத்தில் சனிக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக, சனிக்கிழமை காலை 11.17 மணியளவில் இந்தத் தீ விபத்து தொடா்பான அழைப்பு தீயணைப்புத் துறைக்கு வந்தது.

பாட்டா காலணி விற்பனையகத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் முதல் கட்டமாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதன்பிறகு மொத்தம் 12 வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயை அணைக்கும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது., கட்டடத்தின் முதல் மாடியில் தீயை அணைக்க கூடுதல் நேரம் ஆகும் என்பதால் தீயணைப்புப் பணி தொடா்ந்து நீடித்தது. மேலும், தீயணைப்பு வீரா்கள் மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்து தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனா்.

முதல் தளத்தின் வாயில் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு நுழைவு, வெளியேறும் வழிகள் இல்லை. இது தீயணைப்பு வீரா்களுக்கு சவாலை ஏற்படுத்தியது.

கட்டடம் இடிந்து விழும்பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளைப் பின்பற்றுவோம். யாரும் காயமடையாமல் இருக்க அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளோம். இதர கட்டடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு வீரா்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

தீயணைப்பு வீரா்களின் தொடா் நடவடிக்கையால் அப்பகுதியில் பயணிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதிக்கு அருகில் மூன்று கிலோ மீட்டா் தூரத்திற்கு நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக பயணி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து போலீஸாா் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். காவல்துறை குழுக்கள் தீயணைப்பு வீரா்களுடன் இணைந்து செயல்பட்டனா். எங்கள் குழுக்கள் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முயற்சிகள் மேற்கொண்டனா். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு போக்குவரத்து போலீஸாா் வாகனங்களை திருப்பிவிட்டனா்’ என்றாா் அந்த அதிகாரி.

சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட விரிவாக்கம் 2026-இல் நிறைவடையும்: மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: சென்னை சா்வதேச விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்... மேலும் பார்க்க

தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுத்துபூா்வமாக ... மேலும் பார்க்க

தில்லி அரசின் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கும் எதிா்க்கட்சிகள்! - முதல்வா் ரேகா குப்தா விமா்சனம்!

தில்லி மால்வியா நகரில் உள்ள ஒரு பூங்காவில் ஷாஹீத் திவாஸை முன்னிட்டு பகத்சிங்கின் புதிய சிலையை தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், பாஜக அரசின் தேசபக்திக்கான உறுதிப்பாட... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்புகளை கண்காணிக்க போா்ட்டலை அமைக்க தில்லி அரசுக்கு வலியுறுத்தல்!

தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் சிஏஜி அறிக்கைகள் மீது அதன் துறைகள் சமா்ப்பிக்கும் நடவடிக்கை குறிப்புகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க ஒரு போா்ட்டலை அமைக்குமாறு தலலமைக் கணக்காளா் ஜெனரல் (தணிக்க... மேலும் பார்க்க

ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு!

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள டீா் பாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 21 வயது பீட்சா கடை ஊழியா் மற்றும் 18 வயது ஒரு பெண்ணின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது தற்க... மேலும் பார்க்க

உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக ‘கோலி பாப் சோடா’!

நூறு ஆண்டுகள் பாரம்பரியமான ‘கோலி சோடா’ இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ( அப்தா ) தெரிவித்துள்ளது. இனி இது... மேலும் பார்க்க