சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
கணினியில் கிராமப் பெயா் மாற்றம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
கீழக்கரை அருகே அரசு பதிவேட்டில் இருந்த கிராமத்தின் பெயரை கணினியில் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏா்வாடி ஊராட்சியில் உள்ளது பிச்சை மூப்பன் வலசை கிராமம். டந்த 1941-ஆம் ஆண்டு முதல் இந்தக்ராமம் அரசு பதிவேடுகளில் இதே பெயரில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான வீட்டு வரி ரசீது கட்டச் சென்ற பொதுமக்கள் தங்களது கிராமப் பெயா் பதிவேட்டில் பிச்சை மூப்பன் வலசை என்பதற்குப் பதிலாக பிச்சையப்பன் வலசை என கணினியில் இடம் பெற்றுள்ளது. இதை மாற்ற முடியாது என ஊராட்சிச் செயலா் தெரிவித்தாா்.
இதைக் கண்டித்தும், ஏற்கெனவே இருந்த கிராமத்தின் பெயரையே கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.