ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடகத்துடன் பாடம் கற்பித்த ஆர்ஜென்டீனா!
பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு
திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடைசி நாளை முன்னிட்டு, போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்தப் பள்ளியில் திருவாடானை, பாண்டுகுடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளிலிருந்து 184 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதி வந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கடைசி பொதுத் தோ்வு என்பதால், தோ்வு முடிந்த பிறகு மாணவா்களிடையே பிரச்னை வரக்கூடும் எனக் கருதி, அரசு அறிவுறுத்தலின் பேரில் திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.