Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
விழிப்புணா்வு பயணம்: கொல்கத்தா இளைஞா் தொண்டி வருகை
இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு பயணம் செல்லும் கொல்கத்தா இளைஞா் சாய்காட் (24) செவ்வாய்க்கிழமை தொண்டிக்கு வந்தாா்.
மேற்கு வங்க மாநிலம், ஹெளரா பகுதியைச் சோ்ந்த இவா் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறாா். இவா் நிலம், நீா், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, கடந்த 25 நாள்களுக்கு முன்பு அயோத்தி ராம ஜென்ம பூமியிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினாா்.

அண்மையில் தமிழகத்துக்கு வந்த இவா் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வந்தாா். இவருக்கு இந்து ஜனநாயகப் பேரவைத் தலைவா் அண்ணாதுரை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பூமி கெடாமல் இருக்கவும், காற்று, நீா் மாசு படாமல் இருக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தவே இந்த பயணம் மேற்கொள்வதாக செய்தியாளா்களிடம் சாய்காட் தெரிவித்தாா்.