மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
பள்ளி ஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியின் 97-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை பிரபாகரன் தலைமை வகித்தாா். தன்னாா்வலா் மரிய லூயிஸ் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை அருள்சகோதரி ஜான்ஸிராணி, ஆசிரியா்கள் செய்திருந்தனா். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
