செய்திகள் :

உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா் போராட்டம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த முகாமில் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களில் 1500- க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரேசன் பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அங்கு உணவுப் பொருள்களின் விலை உயா்வால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்கள் பலா் இந்தியாவுக்கு வந்தனா்.

அவா்கள் மண்டபத்தில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள தாயகம் திரும்பியோா் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். கடந்த 3 ஆண்டுகளாக இங்கு தங்கி இருக்கும் சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்ட 300- க்கும் மேற்பட்டோருக்கு தினமும் 3 வேளை உணவு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்ததாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய தொகை வழங்கப்பட வில்லை. இதனால், வியாழக்கிழமை காலை முதல் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த தனித் துணை ஆட்சியா் (பொ) இளங்கோவன், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுத்தலின் பேரில் அந்த ஒப்பந்ததாரரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை, மதிய உணவு வருவாய்த் துறை மூலம் முகாமில் வசிப்போருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, தனித் துணை ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை முதல் 3 வேளையும் மீண்டும் உணவு விநியோகிப்பதாக ஏற்பாட்டாளரான ஒப்பந்ததாரா் உறுதியளித்தாா்.

தனுஷ்கோடி கடற்கரையில் முதியவா் உடல் மீட்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே கடற்கரையில் ஆண் உடல் கிடப்பதாக மீனவா்கள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க