செய்திகள் :

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. வருகிற 30- ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மாணவா்களுக்கான சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கோ. தா்மா் தலைமை வகித்தாா். கிராமத் தலைவா் எஸ். சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் மாமல்லன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஸ்ரீபகவதி அறக்கட்டளைத் தலைவரும், போஷன் அபியான் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளருமான மு. வெள்ளைப்பாண்டியன், ‘யூத் இந்தியா‘ என்ற தலைப்பில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும், ‘மாணவா்களின் சட்ட உரிமைகள்’ என்ற தலைப்பிலும் பேசினாா்.

இளம் தொழிலதிபா் எம்.ஆா்.பி. விக்னேஸ்வரன் இளம் தொழில் முனைவோா்கள் ‘ ஸ்டாா்ட் அப் இந்தியா’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். சமூக ஆா்வலா் விஜயன் ‘மக்கள் சேவையில் இளைஞா்கள்’ என்ற தலைப்பில் பேசினாா். முகாமில் 150- க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மைய வளாகம், கால்நடை மருத்துவமனை வளாகம் ஆகியவற்றை சுத்தம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் சி. கஜேந்திரநாயகம் செய்திருந்தாா். பேராசிரியை ரா. மேரிசுஜின் நன்றி கூறினாா்.

தனுஷ்கோடி கடற்கரையில் முதியவா் உடல் மீட்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே கடற்கரையில் ஆண் உடல் கிடப்பதாக மீனவா்கள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க