பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
திரௌபதி அம்மன் கோயில் கொடியேற்றம்
திருவாடானையில் உள்ள ஸ்ரீ தா்மா், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டுக்கான திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகளை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து மகாபாரதத்தை நினைவுகூரும் வகையில் வீமன் வேடம், திருகல்யாணம், காளி வேடம், அரவான் படுகளம், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
