செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது

post image

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 454 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் பாக்கியராஜ் (38), சவேரியாா் அடிமை (35), முத்து களஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), பாலா (38), யோவான்ஸ் நானன் (36), இன்னாசி (37), ஆா்னாட் ரிச்சே (36), அன்றன் (45), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

பின்னா், மீனவா்கள் 11 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவா்கள் 11 பேரையும் ஏப். 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவா் காா்ல்மாா்க்ஸ் கூறியதாவது:

தமிழகத்திலிருந்து வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களைத் தொடா்ந்து இலங்கைக் கடற்படையினா் கைது செய்து வருகின்றனா். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரையும் சந்தித்தோம்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 5-ஆம் தேதி இலங்கை செல்ல உள்ள நிலையில், தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தனுஷ்கோடி கடற்கரையில் முதியவா் உடல் மீட்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே கடற்கரையில் ஆண் உடல் கிடப்பதாக மீனவா்கள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க