போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கண்ணாடி
ராமேசுவரத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கருப்பு கண்ணாடியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்கிழமை வழங்கினாா்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். வெயிலின் தாக்கம் காரணமாக உடலில் நீா்ச் சத்து குறைந்து உ டல் சோா்வு, மன அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கருப்பு கண்ணாடி வழங்கப்படுகிறது.
ராமேசுவரத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கருப்புக் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோயில் காவல் நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கலந்துகொண்டு போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடிகளை வழங்கினாா்.
காவல் துணைக் காணிப்பாளா் சந்தமூா்த்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், ரவிவா்மா உள்ளிட்ட போக்குவரத்து பொலீஸாா் கலந்து கொண்டனா்.