சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
மயானம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்
கடலாடி சிறைக்குளம் கிராமத்தில் அருந்ததியா் இன மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், சிறைக்குளம் ஊராட்சியில் கிழக்கு அருந்ததியா் குடியிருப்பு பொதுமக்கள் கடந்த 10 தலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், தங்கள் சமுதாயத்துக்கான மயான இடத்தை மீட்டுத் தருமாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.