பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
குடிநீா் கோரி பொதுமக்கள் மனு
குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, தாடிக்கொம்பை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: எங்களது கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக முறையான குடிநீா் வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால், பெண்களும், குழந்தைகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.