Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சாலை விபத்தில் உயிரிழப்பு
குஜிலியம்பாறை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (76). ஓய்வு பெற்ற அரசுத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா். இவா் திங்கள்கிழமை தளிப்பட்டியிலிருந்து, குஜிலியம்பாறைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கல்-கரூா் பிரதான சாலையில் தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.