ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது:
மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்றுநா் மூலம் இந்த நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டப் பயிற்சி முகாம் வரும் ஏப்.1 முதல் 13-ஆம் தேதி வரையிலும், 2-ஆம் கட்ட முகாம் ஏப்.15 முதல் 27ஆம் தேதி வரையிலும், 3-ஆம் கட்ட முகாம் ஏப்.29 முதல் மே 11-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் கட்டப் முகாம் மே 13 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 5-ஆம் கட்ட முகாம் மே 27 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு காலை 7 முதல் 8 மணி வரை, 8 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரையும், பெண்களுக்கு பிற்பகல் 1 முதல் 2 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
நீச்சல் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 12 நாள்கள் பயிற்சிக்கு நபருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.1,770 கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் நீச்சல் கற்றுக் கொள்ளலாம். நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோா் நேரடியாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத் தொகை பணமாக வசூலிக்கப்படமாட்டாது. எண்ம தொழில்நுட்ப முறையில் மட்டுமே கட்டணத் தொகைப் பெறப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரையும், பயிற்றுநரை 9677649197 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.