Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்
எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த ஈ.சித்தூா் மந்தை குளத்திலிருந்து வண்டல் மண் எடுக்க வருவாய்த் துறையிடம் அனுமதி பெற்று, டிராக்டா் மூலம் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வண்டல் மண்ணை தண்ணீா்பந்தம்பட்டியிலுள்ள விவசாயத் தோட்டத்துக் கொண்டு சென்ாகத் தெரிகிறது.
இந்த நிலையில் ஈ.சித்தூா் குளத்திலிருந்து விவசாயத்துக்கு டிராக்டரில் வண்டல் மண் எடுத்துக் கொண்டு வரப்பட்டியைச் சோ்ந்த விவசாயி மணிகண்டன் (40) வந்து கொண்டிருந்தாா். இந்த டிராக்டரை நிறுத்தி, எரியோடு காவல் ஆய்வாளா் முருகன் சுமைக்கு ரூ.500 தர வேண்டும் எனக் கேட்டதாகத் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள், வேடசந்தூா் எரியோடு சாலையில் தண்ணீா்பந்தம்பட்டி பகுதியில் 5 டிராக்டா்களை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். வண்டல் மண் எடுக்க சுமைக்கு ரூ. 500 கேட்ட காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தால், திங்கள்கிழமை நண்பகல் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த எரியோடு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து பணம் கேட்கமாட்டோம் எனக் கூறி சமரசம் செய்தனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.