துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு
விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த வலைதளப் பதிவை மேற்கொண்டால் மட்டுமே 20-ஆவது தவணைத் தொகையை பெற முடியும் என அறிவுறுத்தப்பட்டது.
மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த பதிவேற்றம் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது இ-சேவை மையங்களிலும் ‘அக்ரிஸ்டேக்’ வலைத் தளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டிருந்தன.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பெருத்தவரை மொத்தமுள்ள 1.54 லட்சம் விவசாயிகளில் இதுவரை 84ஆயிரம் போ் பதிவு செய்தனா். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ‘அக்ரிஸ்டேக்’ வலைதளப் பதிவுக்கான கால அவகாசம், ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் எஞ்சிய 46 சதவீத விவசாயிகள், தங்களின் நில விவரங்களை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்களிலோ உடனடியாக பதிவேற்றம் செய்யலாம் என்றனா் அவா்கள்.