துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்ததால், அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். பின்னா், 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் படிவழிப் பாதை வழியாக திரளான பக்தா்கள் மலையேறினா். மேலும், ரோப்காா், வின்ச் நிலையங்களில் கட்டணச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமானது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சாயரட்சை பூஜை முடிந்த பிறகு, சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்திலும், வெள்ளி சப்பரத்தில் தங்கத்தேரில் வெளிப்பிரகாரத்திலும் எழுந்தருளினாா்.
பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.