Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழா தீா்த்தக்காவடிக்கு புகழ் பெற்ாகும். இந்த விழாவை முன்னிட்டு, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து, கொடுமுடி தீா்த்தம் எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வருவா். இந்த கொடுமுடி தீா்த்தம் மூலம் பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இந்தத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி பழனி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. விழா நாள்களில் தினமும் வள்ளி, தேவசேனை சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி சந்நிதி வீதி, கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், வெள்ளித்தேரில் சுவாமி எழுந்தருளி கிரி வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப். 11-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. ஏப். 14-ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.