Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்
பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்காா் பக்தா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் பழனி ரோப்காா் நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தா்கள் மின் இழுவை ரயில், படிப் பாதையைப் பயன்படுத்தி மலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.