`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்' - அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.கா...
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அஜய்குமாா் (26). கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அஜய்குமாா் மீது சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அஜய்குமருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்தாா்.