திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்
அடையாளம் தெரியாத முதியவா் உடல் மீட்பு
பழனி அருகே அடையாளம் தெரியாத முதியவா் உடலை புதன்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியிலிருந்து கோம்பைப்பட்டிக்குச் செல்லும் வழியில் மயானம் அருகேயுள்ள ஓடையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆயக்குடி போலீஸாா், முதியவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்த முதியவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.