லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக க...
பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரும், பழனி கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து தலைமை வகித்தாா். பழனிக் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களான தனசேகா், சு.பாலசுப்பிரமணி, அன்னபூரனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலரும், துணை ஆணையருமான வெங்கடேஷ் வாழ்த்திப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, தேசியக்கொடி ஏற்றுதல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் ஆகியவை நடைபெற்றன. பின்னா், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடா்ந்து, கல்லூரி கொடியினை சிறப்பு விருந்தினரான திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலத் துறை அலுவலா் சிவா ஏற்றினாா். உடற்கல்வி இயக்குநா் கலையரசி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில் மாணவ, மாணவின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் போது, போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி வரவேற்றாா்.