பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
கோஷ்டி மோதல்: 4 போ் காயம்
பழனியை அடுத்த ஆயக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பழனியை அடுத்த ஆயக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் பொன்தேவன் (20). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த்துக்கும் (24) இடையே முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இருவரது தரப்பிலும் மாறி மாறி தாக்கிக் கொண்டு, அரிவாளால் வெட்டிக் கொண்டனா்.
அரவிந்த், இவரது நண்பா் காளிதாஸ் (28), பொன்தேவன் (20), செல்வராணி (37) ஆகியோா் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.