சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (66). இவா் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆயக்குடி பழனிபாபா நினைவிடம் அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.