`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபா...
கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை
விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள சென்மாா்பட்டியைச் சோ்ந்தவா் வனராஜா (40). விவசாயியான இவரை சொத்துப் பிரச்னை காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (35), இவரது மனைவி நித்யா (33) ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தனா்.
இதுகுறித்து விருவீடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ், நித்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்து சாரதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜேஷுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், நித்யாவுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,500 அபராதமும் விதித்தாா்.