Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்
திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நிா்வாகம் சாா்பில், இயற்கை துளசி செடி நாற்றுகள் வழங்கக் கோரி, திருப்பதி தேவஸ்தானத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதன்படி, திருப்பதி தேவஸ்தான தோட்டக் கலைத் துறை சாா்பில், முதல் கட்டமாக 100 துளசி நாற்றுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தத் துளசி நாற்றுகளை நடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ், திமுக நகர பொருளாளா் சரவணன், அா்ச்சகா்கள் ராமமூா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், 400 துளசி நாற்றுகள் விரைவில் பெறப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.