செய்திகள் :

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

post image

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கநாதன் (26). இவரது சகோதரா் கருப்புச்சாமி (31). இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரெங்கநாதன், கருப்புச்சாமி இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சகோதரா்கள் இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலம்!

நமது நிருபா் திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டது. நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி கிராமத்தில் 12 ஏக்கரில் பா... மேலும் பார்க்க

அய்யலூா் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மூலம் ரூ.2 கோடிக்கு வியாழக்கிழமை வா்த்தகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயிலடி ... மேலும் பார்க்க

ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறி... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவுக்கு பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்

திண்டுக்கல், மாா்ச் 27: விவசாய நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்ய பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: ... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் சா்வதேச மாநாடு தொடக்கம்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், ‘இந்தியாவில் நிலையான வளா்ச்சி இலக்குகள், சாதனைகள், எதிா்கால சவால்கள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க