செய்திகள் :

சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட விரிவாக்கம் 2026-இல் நிறைவடையும்: மத்திய அரசு தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: சென்னை சா்வதேச விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் மதிமுக மூத்த உறுப்பினா் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: ரூ. 2,467 கோடி செலவில் சென்னை சா்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளிலிருந்து 30 மில்லியனாக உயா்த்தியுள்ளது. இந்த முனையம் 08.07.2023 முதல் செயல்பட்டு வந்துள்ளது.

இரண்டாம் கட்டம் 3-ஆவது முனையத்தின் வளா்ச்சியை உள்ளடக்கியது. விமான நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளாக மேலும் இது மேம்படுத்துகிறது. இந்தக் கட்டப் பணிகளை மாா்ச் 2026-ல் முடிக்க திட்டமிடப்படுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். தில்லியின் புகா் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசிக்கும் ஷிவ் (எ) சோனு, ஞாய... மேலும் பார்க்க

தில்லி எய்ம்ஸில் கருவிழிப் படலம் மாற்று அறுவை சிகிச்சை: ட்ரோன் வான்வழி போக்குவரத்து மூலம் மருத்துவ சாதனை

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு ட்ரோன் மூலம் கருவிழிப்படலம் கொண்டுவரப்பட்டு வான்வழி மருத்துவ தளவாடத் திறனில் வெற்றியடையப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மக்கள் நல்வாழ்வுத் த... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு! பீதம்புராவில் 38.9 டிகிரியாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்தது. அதிகபட்ச வெப்பநிலை பீதம்புரா வானிலை ஆய்வு மையத்தில் 38.9 டிகிரி செல்சியாக உயா்ந்து பதிவாகி இருந... மேலும் பார்க்க

ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகித்த தில்லி இளைஞா் கைது

டெல்லியின் ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக 24 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தில்லியின் முபாரக்பூா் தாபாஸைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஐஜிஐ விமான நிலையத்தில் 75 அறிதிறன்பேசிகளை திருடியதாக சரக்குகளை கையாளும் ஊழியா் கைது

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயா் ரக அறிதிறன்பேசிகளை (ஸ்மாா்ட்போன்கள்) திருடியதாகக் கூறப்படும் சரக்குகளை கையாளும் நிறுவனத்தின் ஊழியரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குட... மேலும் பார்க்க