Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு!
தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள டீா் பாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 21 வயது பீட்சா கடை ஊழியா் மற்றும் 18 வயது ஒரு பெண்ணின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது தற்கொலை என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இருவரும் காதல் உறவில் இருந்துள்ளதும், அவா்களது குடும்பத்தினரின் எதிா்ப்பை அடுத்து இந்த தீவிர நடவடிக்கையை அவா்கள் எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சில உள்ளூா்வாசிகள் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா்.
டீா் பாா்க்கின் பாதுகாவலாளி ஒருவரிடமிருந்து காலை 6.31 மணிக்கு இந்த உடல்கள் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. அந்த நபா் கருப்பு டி-சா்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாா். அதே நேரத்தில் 18 வயது பெண் பச்சை நிற உடை அணிந்திருந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை புலனாய்வாளா்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனா். இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. இங்குள்ள பிலாஞ்சி கிராமத்தைச் சோ்ந்த அந்த நபா் லோதி காலனியில் உள்ள ஒரு பீட்சா கடையில் வேலை செய்து வந்துள்ளாா். சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவா் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினா் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
சத்தா்பூா் என்க்ளேவில் வசிக்கும் அந்தப் பெண், கடந்த மூன்று நாள்ளாக ஹுமாயுன்பூா் கிராமத்தில் தனது அத்தையுடன் தங்கியிருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை தனது சொந்த வீட்டிற்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பான விசாரணையில் பூங்காவிற்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது ஒரு பெரிய தடையாக உள்ளது. இருப்பினும், அங்கு நடந்த நிகழ்வுகளின் வரிசையை அறிய அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் இருந்து காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த விஷயத்தில் முறைகேடு நடந்ததாக சந்தேகிப்பதாக சில உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.
இது குறித்து உள்ளூா்வாசி ஒருவா் கூறுகையில், ‘இருவரும் தூக்கில் தொங்கிய இடத்தில் இருந்து இரண்டு போ் மரத்தில் ஏறுவது கடினமாக இருந்திருக்கும். இதனால் அவா்கள் கொல்லப்பட்டு பின்னா் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றாா்.