தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?
19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜன் (41). இவா், இரும்பேடு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இரும்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
இதில், தங்கராஜன் கடையில் ஆய்வு செய்தபோது, 19 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்து அதனை பறிமுதல் செய்தனா்.
இதன் மதிப்பு ரூ.16ஆயிரம் எனத் தெரிவித்தனா். மேலும் தங்கராஜனை கைது செய்தனா்.