`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
Dhoni: `தம்பி நீங்க அவுட் கெளம்பலாம்' - பிலிப் சால்ட்டை கண்ணிமைக்கும் நொடியில் அசால்ட்டாக்கிய தோனி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணியும், ஆர்.சி.பி அணியும் இன்று மோதின. 2008-க்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கெதிராக வெற்றி பெற்றதில்லை என்கிற வரலாற்றை மாற்றியமைக்க பெங்களூரு அணியும், கடந்த சீசனில் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி-யிடம் தோற்றதால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதற்கு கணக்கைத் தீர்க்க சென்னை அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் ருத்துராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, பிலிப் சால்ட்டும், விராட் கோலியும் ஆர்.சி.பி-யின் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய பிலிப் சால்ட், அடுத்தடுத்து சிக்ஸ், ஃபோராக விளாசி 4 ஓவர்களில் தான் மட்டும் 14 பந்துகளில் 31 ரன்கள் அடித்து என பவுலர்களை விளாசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில்தான் ஓவர் வீச வந்தார் கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் நூர் அகமது. எப்படி அந்தப் போட்டியில், நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் தோனி ஸ்டம்பிங் செய்தாரோ, அதேபோல இந்தப் போட்டியில் நூர் அகமது வீசிய 5-வது ஓவரின் கடைசி பந்தில் பிலிப் சால்ட் கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் பெவிலியனுக்கு அனுப்பினார் தோனி.
2️⃣ moments of magic 2️⃣ ultra fast stumpings ⚡
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
Which one did you enjoy the most?
Scorecard ▶ https://t.co/I7maHMwxDS#TATAIPL | #CSKvRCBpic.twitter.com/SxPcEphB6Y
`இதுக்கு முன்னாடி தோனி இந்த மாதிரி அதிவேக ஸ்டம்பிங்ஸ் எக்கச்சக்கமா பண்ணிருக்காரு, ஆனாலும் இதான் முதல்முறை' என்பது போல தோனி ரசிகர்கள் அந்த மொமெண்ட்டை கொண்டாடினர். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்த ஆர்.சி.பி, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களைக் குவித்து, சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே-வுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது. சென்னை 6 ஓவர்கள் முடிவில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.