`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!
புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2023-24ல் இந்தியா மொத்தம் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா தங்கத்தின் மீது இறக்குமதி வரியை விதிக்கிறது என்றார்.
எம்.எஃப்.என் கீழ், தங்கக் கட்டிகள் (gold bullion) மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதமாகவும், தங்கம் மற்றும் பிற உலோகக் கலவையுடன் கூடிய கலவை (gold dore) தங்கத்திற்கு 5.35 சதவிகிதமாகவும் உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியா 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்தது. உள்நாட்டு தொழில் நலன்கள் மற்றும் பொருளாதாரக் கருத்தாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளின் போதும் விவாதிக்கப்பட்டது.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகும்.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், 160 டன் வரை எடையுள்ள தங்கக் கட்டிகளுக்கு 5 சதவிகத வரியும், தங்கம் மற்றும் பிற உலோகக் கலவையுடன் கூடிய கலவைக்கு (gold dore) 4.35 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!