ப்ளீஸ் என்னை அப்படிப் பாக்காதே: பேட் கேர்ள் பட பாடல் வெளியானது!
பேட் கேர்ள் திரைப்படத்தின் முதல் பாடலான ’ப்ளீஸ் என்னை அப்படிப் பாக்காதே' இன்று வெளியானது.
இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். இந்தப் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
ஒரு பெண் தனது வாழ்க்கையில் கடந்து வரும் காதல்கள் மற்றும் அதன்மீது சமூகம் கட்டமைத்து வைத்துள்ள கற்பிதங்கள் பற்றி பேசும் பேட் கேர்ள் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முதல் பாடலான ‘ப்ளீஸ் என்னை அப்படிப் பாக்காதே’ இன்று வெளியாகியுள்ளது.
கேபர் வாசுகி எழுதிய இந்தப் பாடலை மாளவிகா மனோஜ் பாடியுள்ளார்.
பேட் கேர்ள் திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.