செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6ம் தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கிறது.

ஆகவே, பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்று தேமுதிக சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

தாட்கோ புதிய தலைவர் நியமனம்

பிரதமர், ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில் அந்த பாலத்திற்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்டி இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க நமது பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் APJ அப்துல்கலாமின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.சிவகங்கை நேரு பஜார் வாலாஜா... மேலும் பார்க்க