செய்திகள் :

தென்னிந்தியாவில் ஹிந்தி படங்கள் வெற்றி பெறுவதில்லை: சல்மான் கான்

post image

தென்னிந்தியாவில் எனது படங்கள் வெளியாகும்போது பாக்ஸ் - ஆபிஸ் வெற்றி கிடைக்காது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் சிக்கந்தர் . இதில், ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளனர்.

ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற மார்ச் 30 ரமலான் என்று வெளியாகிறது.

இந்த நிலையில், சிக்கந்தர் படக்குழுவினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய திரைத்துறை பற்றி சல்மான் கான் பேசினார்.

அதில், “தென்னிந்தியாவில் எனக்கு மிக வலுவான ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் அன்பை எப்போதும் நான் அனுபவித்து வருகிறேன். ஆனால், எனது படங்கள் அங்கு வெளியாகும்போது அந்த அன்பு பாக்ஸ் - ஆபிஸ் வெற்றியாக மாறாது. அவர்களைத் திரையரங்குகள் நோக்கி இழுப்பது மிகவும் சவாலாக உள்ளது.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா போன்ற பல தென்னிந்திய நடிகர்களுக்கு பாலிவுட்டில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. நாங்களும் அவர்களின் படங்களைப் பார்க்கின்றோம். ஆனால், அதேபோல எங்களுக்கு நடப்பதில்லை

தென்னிந்திய சினிமா தனித்துவமானது. அதில், கலாச்சாரத்துடனான இணைப்பு இருக்கும். அதனால்தான் பான் இந்தியா படங்கள் தொடர்ந்து வெளியாகும் போக்கு இருந்தாலும் பாலிவுட் ஹிந்தி திரைப்படங்கள் அங்கு பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை” என்று பேசினார்.

பான் இந்தியா திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவது பற்றிப் பேசிய அவர், “புஷ்பா திரைப்படம் எப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான சினிமா பான் இந்தியாவுக்கானதாக மாறும் என்பதைக் காட்டியது.

ஆனால், அதுபோன்ற படங்களை உருவாக்க பெரிய நிதி முதலீடும் அனைவருக்கும் பொதுவான கதைக் களமும் தேவைப்படும்” என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க | இயக்குநராகும் ஹிருத்திக் ரோஷன்..! எந்தப் படத்தை இயக்குகிறார்?

விரைவில் குக் வித் கோமாளி புதிய சீசன்: பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட... மேலும் பார்க்க

சர்தார் - 2 டீசர்!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது... மேலும் பார்க்க

மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்திய சினிமாவில் அழுத்தமான அரசியலைப் பேசும் திரைப்படங்கள் எந்த மொழியில் உருவாகின்றன எனக் கேட்டால், மலையாளம்... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆறாட்டு விழாவுக்காக நாளை(ஏப். 1) நடை திறப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நா... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பைத் தூண்டும் சிவராஜ்குமாரின் 45 டீசர்!

நடிகர் சிவராஜ்குமார் நடித்த 45 படத்தின் டீசர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார். பின்,... மேலும் பார்க்க

சர்தார் - 2 முதல் தோற்ற போஸ்டர்!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உ... மேலும் பார்க்க