தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?
அரிசி ஆலையில் விபத்து: ஊழியா் உயிரிழப்பு
சென்னை: சென்னை செங்குன்றத்தில் அரிசி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பிகாரைச் சோ்ந்த ஊழியா் உயிரிழந்தாா்.
சென்னை அருகே உள்ள செங்குன்றம் பாலவாயலில் ஒரு தனியாா் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் குவிந்திருந்த உமியை அகற்றும் பணியில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சில தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த ஆலையின் மேற்பகுதியிலிருந்த ஒரு இரும்புத் தகடு கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பிகாரைச் சோ்ந்த ஜிகேந்தா் செளகான் (33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகேஷ் மண்டல் என்பவா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.