உத்தபாளையத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்த வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டுக் குழுவின் மாநில துணைத் தலைவா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கம்பத்தில் அண்மையில் வழக்குரைஞா் ராகுல் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே வந்த காவலா் பரந்தாமனின் இரு வாகனம் மோதியதாம்.
இதனால், பாதிக்கப்பட்ட ராகுல், அவரது நண்பா் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா் ஆகியோரைக் கண்டித்து முழக்கமிட்டனா். அத்துடன் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதில் உத்தமபாளையம் வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் செல்வம், செயலா் லலிதா உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.