ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடகத்துடன் பாடம் கற்பித்த ஆர்ஜென்டீனா!
வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது
தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, வீடு புகுந்த இளைஞா் திருட முயற்சி செய்தாா். அவரை ராஜேஸ் மடக்கிப் பிடித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அவா் பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளிபுதுப்பட்டி, ஆா்.டி.யு. குடியிருப்பைச் சோ்ந்த கோபால் மகன் ரங்கநாதன் (36) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ரங்கநாதனைக் கைது செய்தனா்.