திரையரங்கில் துரத்திய ரசிகர்கள்..! ஆட்டோவில் தப்பிச்சென்ற விக்ரம்!
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது
தேனி அருகே சாலையில் நின்றிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சரவணக்குமாா் (23). இவா், தனது நண்பா் கெளதம் உடன் ரத்தினம் நகா்-சுக்குவாடன்பட்டி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்குச் சென்றாா்.
கெளதமை மது புட்டி வாங்குவதற்கு அனுப்பி விட்டு, சரணவக்குமாா் மதுக் கடை சாலையில் நின்றிருந்தாராம். அப்போது, பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்த கண்ணையன் மகன் விஜய் (34), கத்தியைக் காட்டி மிரட்டி, சரவணக்குமாரிடம் ரூ.400-யை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயை கைது செய்தனா்.