தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா வரும் ஏப்.1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் தேனி புத்தகத் திருவிழா கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாா்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தகத் திருவிழா, பொதுமக்கள், வாசகா்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஏப்.1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.