`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவருக்கும் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி தென்றல் நகரில் உள்ள சுரேஷ்குமாருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், கடந்த 25-ஆம் தேதி கவிதா வீட்டை விட்டு வெளியே சென்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கவிதா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை கடந்த 26-ஆம் தேதி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்து, அவரைத் தேடி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பூதிப்புரம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றிலிருந்து கவிதாவின் சடலம் மீட்கப்பட்டது. கவிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.