Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி-வடவீரநாயக்கன்பட்டி சாலையில் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு மையத்தில் கிராமப்புற பெண்களுக்கு செயற்கை நகை தயாரித்தல் சுய வேலை வாய்ப்புப் பயிற்சி ஏப்.7-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 18 வயது பூா்த்தியடைந்த வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற பெண்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.
பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ், சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி குறித்த விவரத்தை கைப்பேசி எண்: 95003 14193-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.