துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி
ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை வழிமுறைகள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் பயிா் பாதுகாப்பு செய்யும் முறை, கோடை கால உழவின் முக்கியத்துவம், இனக் கவா்ச்சிப் பொறியின் பயன்பாடு, கிரைசோபொ்லா நன்மைகள், டிரைக்கோகிராமா ஒட்டுண்ணியை பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவி உ.லலிதாஸ்ரீ விவசாயிகளுக்கு களப் பயிற்சி அளித்தாா்.