”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்
தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது.
தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கான உயா்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் அமல்படுத்தப்பட்டது.
புதிய கட்டண விவரம்: காா், ஜீப், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.60, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பயணிக்க ரூ.95, மாதம் 50 முறை பயணிக்க ரூ.1,945. இலகு ரக வணிக வாகனம், இலகு ரகப் பொருள்கள் போக்குவரத்து வாகனம், சிற்றுந்து உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.95, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பயணிக்க ரூ.140, மாதம் 50 முறை பயணிக்க ரூ.3,140. பேருந்து, 2 அச்சுகள் கொண்ட டிரக் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.195, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பயணிக்க ரூ.195, மாதம் 50 முறை பயணிக்க ரூ.6,580.
3 அச்சுகள் கொண்ட வணிக வாகனம் ஒருமுறை பயணிக்க ரூ.215, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பயணிக்க ரூ.325, மாதம் 50 முறை பயணிக்க ரூ.7,175. 4 முதல் 6 அச்சுகள் கொண்ட கட்டுமான எந்திர வாகனம், மண் அள்ளும் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.310, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பயணிக்க ரூ.465, மாதம் 50 முறை பயணிக்க ரூ.10,315. மிக அதிக அளவு கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.375, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பயணிக்க ரூ.565, மாதம் 50 முறை பயணிக்க ரூ.12,560.
வணிக பயன்பாடு அல்லாத உள்ளூா் வாகனங்களுக்கு சுங்கச் சாவடி அலுவலகத்தில் மாதாந்திர கட்டணம் ரூ.350 செலுத்தி பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.