மாணவியை கேலி செய்த இளைஞருக்கு ஓராண்டு சிறை
பெரியகுளத்தில் பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரியகுளம், வடகரை, அழகா்சாமிபுரம், கல்லாறு சாலையைச் சோ்ந்த நாகராஜன் மகன் சிபிராஜா (24). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு 7-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை பின் தொடா்ந்து சென்று கேலி செய்து வந்தாராம். இதுகுறித்து கடந்த 2022, செப்.17-ஆம் தேதி சிபிராஜா மீது பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிபிராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் உத்தரவிட்டாா்.